Sri Sivasakthi Kumaran Bremen

Sri Sivasakthi Kumaran Bremen

Donnerstag, 18. Februar 2016

மாசி மகா மகம் 22-02-2016

மாசி மகா மகம்
மாசி மகா மாம் என்பது மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும்  மகம் நட்சத்திர நாளில் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான  நாளாகும்.பன்னிரண்டு ஆண்டுகளுக்கு  ஒரு முறை வரும்  மகாமகம் இந்த வருடம் வந்துள்ளது.
இந்த நாளில் குரு  பகவான் கும்பராசிக்கு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையே  வருகிறார்.
இந்துக்களால் புண்ணிய நதிகள்  என அழைக்கப்படும்  கங்கை,யமுனை,சரஸ்வதி,காவேரி,கோதாவரி,நர்மதை,சிந்து,சரயு, தாமிரபரணி ஆகிய ஒன்பது நதிகளும் பக்தர்களின் பாவங்களை  நீக்குகிறது. பலருடைய பாவங்களை இந்நதிகள்  நீக்கியதால் இந்நதிகளும் பாவங்கள் கொனடவைகளாயின.
இதனை களைய சிவபெருமானிடம் மக்கள் வேண்டினார்கள்.  அவர் கும்பகோணத்தில் உள்ள மகாமககுளம் என்று அழைக்கப்பெறும் தீர்த்தத்தில் நீராடினால் நதிகளின் பாவங்கள் தீருமென்றார்.
இதுவே இவ்விழா உருவாக காரணமான நிகழ்வாகும். கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் கோவிலில் உள்ள மகாமக குளத்தில் இவ்விழா சிறப்பாக நடைபெறும்.
மகாமகம்  நடைபெற்ற ஆண்டுகள் 1954,1968,1980,1992,2004.

மேலும் 2016ம் ஆண்டு 22-02-2016 அன்று நடைபெற உள்ளது.

Keine Kommentare:

Kommentar veröffentlichen